Sunday, 20 March 2016

Cutest Love Pairs ...






“கலைந்த கனவில் முளைத்த காதல்”


புழுதிகாட்டில் புல்லாக நானும்

சுற்றிவரும் சூறாவளியாக நீயும்

நம்மை,

கருமேகம் கனநேரத்தில்

கண்ணீரால் நனைத்ததேனோ?


முட்டைக்குள் குஞ்சாக நானும்

அடைகாக்கும் கோழியாக நீயும்

எம்மை,

உனக்குள் நான் அவிந்துபோவேனோ

இல்லை அகிலம் காண்பேனோ?


வாடிய செடியாய் நான் நின்ற பொழுது

சொட்டு நீராய் உயிர் தந்தாய்

இன்றோ,

வளர்ந்து பூத்து நிற்கிறேன்

பறித்துத்துக்கொள்ள உனக்கென்ன தயக்கம்?


கண்ணே!

என் தலையனையை கேட்டுப்பார்

எண்ணிலடங்கா இரவுகளில்

உன் நினைவுகளால்

என் விழிநீரில் நனைந்ததை

அது சொல்லும்.


என் தலை பாரத்தை இறக்கிவிட்டேன்

என் இதயத்தின் சுமையை எப்போது

இறக்குவாய்?


ஒருநொடி போதும் சாவதற்கு

ஆனால்,

ஒவ்வொரு நொடியும் வேண்டும் வாழ்வதற்கு.


வாழ்க்கை ஒரு வரப்பிரசாதம்

அங்கே நாம் காதல் ஒரு

தலை பிரசவம்!

நீயும் தாயானாய்

என் நினைவுகளை சுமப்பதினால்.


விடிந்தது காலை

கலைந்தது கனவு

எழுந்துவிட்டேன் நான்.


மறு இரவினை நோக்கி….



Cutest Love Pairs ...

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home